Harmony இயங்குதளத்துடன் கூடிய ஸ்மார்ட் தொலைக்காட்சியை அறிமுகம் செய்யும் ஹுவாவி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஹுவாவி நிறுவனம் தற்போது புத்தம் புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இத் தொலைகாட்சிப் பெட்டியானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றீடாக ஹுவாவி நிறுவனம் வடிவமைத்த Harmony இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

55 அங்குல அளவு, 3840×2160 Pixel Resolution உடைய இத் தொலைக்காட்சியானது 4K தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இத் தொலைக்காட்சிப் பெட்டியின் முழு அளவில் 94 சதவீதம் திரையினை உள்ளடக்கியுள்ளது.

அத்துடன் 178 டிகிரி கோணப்பார்வையைக் கொண்டிருப்பது இத் தொலைக்காட்சியின் விசேட அம்சமாகும்.

எவ்வாறெனினும் Honor Vision TV எனப் பெயரிடப்பட்டுள்ள இத் தொலைக்காட்சிப் பெட்டியின் விலை இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers