இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் இப்படி ஒரு சிக்கலா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகின் பல்வேறு நாடுகளில் ஐந்தாம் தலைமுறை இணையத் தொழில்நுட்பமான 5G அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்வதற்கான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்படியிருக்கையில் குறித்த தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்வது தொடர்பில் உள்ள இடர்பாடுகள் குறித்து ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Ren Zhengfei தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது 5G தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் இந்திய சட்ட ஒழுங்குகள் அப்டேட் செய்யப்படவேண்டியிருப்பதுடன், தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்பினையும் மாற்றியமைக்கவேண்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ள ஹுவாவி நிறுவனம் தெரிவித்த இக் கருத்தானது குறித்த தொழில்நுட்பத்தினை எதிரபார்த்து காத்திருந்த இந்திய மக்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் சட்ட ஒழுங்குகள் மற்றும் தொலைத்தொடர்பால் உட்கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் இதனால் உடனடியாக 5G வரப்பிரசாதங்களை அனுபவிக்க முடியாது என்பதாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்