கொரோனா பரவலின் விளைவு: இந்திய மாணவனின் அபார கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை தடுப்பதற்கு அனைவரும் கைகளை சுத்தமாக வைத்திருக்கமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

இதற்காக கிருமிநீக்கி அல்லது தொற்றுநீக்கிகளை பயன்படுத்தி நன்றாக கைகளை கழுவு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டுபாயில் உள்ள இந்திய மாணவன் ஒருவன் இந்த பணியை செய்யக்கூடிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளான்.

டுபாயின் Spring Dales பள்ளியில் கற்கும் 7 ஆம் வகுப்பு Siddh Sanghvi எனும் மாணவனே இச் சாதனையை படைத்துள்ளான்.

குறித்த ரோபோவானது 30 சென்ரிமீற்றர்கள் எல்லைக்குள் இருக்கும் ஒருவரது கையை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்த கைகளை சுத்தமாக்கும் முறையில் தொடுகை ஏற்படுவதனால் கொரோனா வைரஸ் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டே இந்த தானியங்கி ரோபோவினை குறித்த மாணவன் வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...