ஐபோன்களில் ஸ்பாம் மற்றும் தெரியாத அழைப்புக்களை தடை செய்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஸ்பாம் அழைப்புக்கள் மற்றும் தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்கள் என்பவற்றிற்கு பதிலளிப்பதற்கு அனேகமானவர்கள் விரும்புவதில்லை.

எனினும் இவ்வாறு வரும் அழைப்புக்கள் பயனர்களுக்கு அசௌகரியமானதாகவே இருக்கும்.

இதனால் சில கைப்பேசிகளில் குறித்த வகை அழைப்புக்களை தடை செய்வதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

அவ்வாறு ஐபோன்களில் தடை செய்வது எவ்வாறு என்பதை பார்க்கலாம்.

இதனை செயற்படுத்துவதற்கு Settings பகுதிக்கு முதலில் செல்ல வேண்டும்.

இதன் பின்னர் கீழே சென்று Phone எனும் டேப்பினை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது தோன்றும் Silence Unknown Callers எனும் வசதி தென்படும்.

இவ் வசதியினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்