Mi KN95 ரக மாஸ்க்கினை அறிமுகம் செய்தது Xiaomi நிறுவனம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மொபைல் சாதனங்கள் உட்பட இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்திவரும் Xiaomi நிறுவனம் Mi KN95 எனும் மாஸ்க்கினை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிறுவனம் மாஸ்க்கினை அறிமுகம் செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் கடந்த வருட ஆரம்பத்தில் AirPop மாஸ்க்கினை அறிமுகம் செய்திருந்தது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாஸ்க் ஆனது இண்டினை உள்ளடக்கிய பேக் ஒன்றின் விலை 250 இந்திய ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 5 மாஸ்க்கினை கொண்ட பேக்கினை மக்கள் 600 ரூபாய் பெறுமதியில் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

இந்த மாஸ்க் ஆனது 4 படைகளைக் கொண்ட பாதுகாப்பினை வழங்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

அத்துடன் துணிக்கைகளை 95 சதவீதம் வடிகட்டக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்