ஆப்பிள் நிறுவனம் தொடர்பிலான பேஸ்புக் போஸ்ட்டினை நீக்கியது சாம்சுங்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
45Shares

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் அறிமுகம் செய்துள்ள iPhone 12 கைப்பேசியுடன் சார்ஜரை கொடுத்திருக்கவில்லை என்பது தெரிந்ததே.

இது பல வாடிக்கையாளர்களையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருந்தது.

எனினும் இதனை தனியாகக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் குறித்த செயற்பாட்டினை கிண்டல் செய்யும் வகையிலான போஸ்ட் ஒன்றினை பேஸ்புக்கில் சாம்சுங் நிறுவனம் பதிவிட்டிருந்தது.

அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் முடிவினை பின்தொடர்ந்து தான் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S21 போன்ற கைப்பேசிகளுடன் சார்ஜரை வழங்காது நிறுத்தவுள்ளதாக அப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் அப் பதிவினை தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலிருந்து சாம்சுங் நிறுவனம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்