மட்டக்களப்பு - ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம்

Report Print Kumar in மதம்

கிழக்கிலங்கையிலுள்ள பழமையானதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான மட்டக்களப்பு - ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலய தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனோஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 27.02.2019 திகதி வாஸ்துசாந்தி கிரியையுடன் வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்ற பின்னர் சுவாமி தேர் மீதேறி கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் வலம் வந்தார்.

பெண்கள் ஒரு பகுதியாகவும் ஆண்கள் ஒரு பகுதியாகவும் வடமிழுக்க இந்த தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்