உலக தமிழர்கள் அதிருப்தியில்...தமிழை புறக்கணித்த நாசா

Report Print Steephen Steephen in விஞ்ஞானம்

விண்வெளியில் வாழ்வதாக நம்பப்படும் வேற்று கிரக வாசிகளுக்கு செய்திகளை அனுப்பும் மிகப் பெரிய திட்டத்தை 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க நாசா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில்,2018 ஆம் ஆண்டு முதல் விண்வெளி முழுவதும் உயிரினங்களை தேடி பயணிக்கும் தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றமான பெருந்தொகை விண்கலங்களை அனுப்பி தொடர் நடவடிக்கைகளுக்காக அவை பயன்படுத்தப்பட உள்ளன.

மேசேஜிங் எக்ஸ்ட்ராடெரசிட்டியல் இன்டர்லிஜன் திட்டத்தின்க கீழ் செய்திகள் விண்வெளி முழுவதும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

பூமி என்ற உலகில் இருக்கு விண்வெளியில் வாழும் உயிரினங்களை அழைக்கும் வகையிலான குரல் பதிவுகள் மற்றும் புகைப்படங்களை தாங்கி செல்லும் இந்த விண்கலங்கள் செயலிழந்து போகும் வரை விண்வெளியில் பயணித்து கொண்டிருக்கும்.

உலகில் உள்ள சகல மொழிகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் பூமி குறித்தும் அதன் நிலைமை பற்றியும் விண்வெளியில் வாழும் உயிரினங்களுடன் நட்பு கொள்ள விரும்பும் குரல் பதிவுகள் மற்றும் எழுத்து குறிப்புகள், கணனியில் சேமிக்கப்பட்டு விண்கலங்களுக்குள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

குரல் பதிவுகள் மூலம் வேற்று கிரகவாசிகளை அழைப்பதற்கு உலகில் பழமையான மொழிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த குரல் பதிவுகளுக்கு என்றோ ஒரு பதில் கிடைத்தால், விண்வெளியில் வேற்று கிரகங்களில் வாழும் புத்திசாலிகளான உயிரினங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வேற்று கிரகவாசிகள் பற்றி உறுதிப்படுத்திக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் 55 மொழிகளை நாசா தெரிவு செய்துள்ளது.இந்த மொழிகளிலும் குரல் பதிவுகளுடன் செய்திகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதுடன் சிங்கள மொழியில் ஆயுபோவான் என்ற குரல் பதிவு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

பூமி பற்றி எழுத்துமூலமான தகவல்களும் சிங்களத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்காக இதனை தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மாரத்தி,ஒரியா, பஞ்சாபி, குராத்தி, ராஜஸ்தானி, பெங்காலி, நேபாளி, சுமேரியன், அக்காடியன், ஹீப்ரு, ஆராமிக், ஆங்கிலம், போத்துகீஷ், கேன்டோனிஸ், ரஷ்யன், தாய், அரபு, ரொமேனியன், பிரஞ்ச், பர்மிஸ், ஸ்பேனிஷ், இந்தோனேசியன், கேச்சுவா, டச்சு, ஜேர்மன், வியட்நாமிஸ், கிறீக், லத்தீன், ஜப்பனிஷ், துருக்கிஷ், இத்தாலியன்,நெக்னி, சோதோ, ஹூ, கொரியன், பொலிஷ்,மென்டரின் சைனீஷ், செக், இல்லா (சம்பியா), நைஹென்ஜா, சுவிடிஷ், உக்ரேனியன், பேர்ஷியன்,சேர்பியன், லுகண்டா,அம்மோய் ஆகிய மொழிகளில் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

எது எப்படி இருந்த போதிலும் இந்த திட்டத்தில் உலகில் மிகவும் பழமையான செம்மொழியான தமிழ் மொழியை நாசா புறக்கணித்துள்ளமை உலக தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் ஏற்கனவே இப்படி ஆய்வுகளுக்காக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட உலகின் மிகவும் பழமையான 10 மொழிகளில் தமிழும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments