மூளைச் சிதைவை சரிசெய்து அசத்திய விஞ்ஞானிகள்!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அமெரிக்காவில் இரண்டே வயதான பெண் குழந்தையின் மூளைச் சிதைவை வெற்றிகரமாக சரிசெய்து சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

குறித்த குழந்தை நீச்சல் தடாகம் ஒன்றில் விழுந்துள்ள நிலையில் 15 நிமிடங்கள் கழித்து மீட்கப்பட்டிருந்தது.

இதன்போது அக் குழந்தையின் இதயத்துடிப்பு நின்றிருந்தது.

மூளையில் உள்ள நரைநிறப்பொருள் சிதைவடைந்திருந்ததன் காரணமாகவே இதயத்தின் செயற்பாடு பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் வெற்றிகரமான சத்திர சிகிச்சையின் ஊடாக மூளைச் சிதைவு சரிசெய்யப்பட்டுள்ளது.

ஒட்சிசன் சிகிச்சை மற்றும் மிகை அழுத்த ஒட்சிசன் சிகிச்சை (Hyperbaric Oxygen Therapy - HBOT) என்பனவும் அக் குழந்தைக்கு வழங்கப்பட்டிருந்தது.

விபத்துக்குள்ளான குழந்தை பேச்சை இழந்திருந்ததுடன் நடப்பதற்கு சிரமத்தை எதிர்நோக்கியிருந்தது.

இரண்டு மணிநேர சிகிச்சைக்கு பின்னர் வழமைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments