செவ்வாய் கிரகத்தில் வெளிச்சத்தை உருவாக்குவதற்கு அணு உலை பயன்படுத்த திட்டம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
95Shares
95Shares
ibctamil.com

மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் செவ்வாய் கிரகத்தில் காணப்படுகின்றதா என ஆராய்ச்சிகள் இடம்பெற்றும் சமநேரத்தில் அங்கு மனிதர்களை குடியேற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

மனிதர்களை குடியேற்றும் திட்டம் சாத்தியப்பட்டால் இரவு நேரங்களில் அவர்களுக்கு தேவையான வெளிச்சங்களை உருவாக்குவதற்கு சிறிய ரக அணு உலையை பயன்படுத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

நாசா நிறுவனம் ஏற்கணவே இத் திட்டம் தொடர்பிலான பரிசோதனையில் இறங்கிவிட்ட நிலையிலேயே தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய் கிரகமானது பூமி அல்லது நிலவை விடவும் வித்தியாசமான காலநிலைகளைக் கொண்டுள்ளது.

இதனால் குறைந்த அளவு சூரிய ஒளியே கிடைக்கின்றது.

இதனைப் பயன்படுத்தி தேவையான மின்சக்தியினைப் பெற முடியாது என்பதனாலேயே சிறிய ரக அணு உலை பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்