ரஷ்யாவில் வெகுவாக குறைவடைந்துவரும் உயிரினம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ரஷ்யாவில் தேனீக்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி காணப்படுகின்றமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியிலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தேனீக்கள் பராமரிப்பு சங்கத்தின் தலைவரான ஆர்னோல்ட் பட்டவ் இது பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது சுமார் ரஷ்யாவின் 20 பிராந்தியங்களில் தேனீக்களின் வீழ்ச்சி குறைவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் Bryansk, Kursk, Moscow, Saratov, Ulyanovsk மற்றும் Volga River போன்ற பகுதிகளும் அடங்கும்.

தேனீக்களின் வீழ்ச்சியால் தேன் உற்பத்தி செய்வதும் 20 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக ரஷ்யாவில் ஆண்டுதோறும் 100,000 தொன் தேன் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்