மீண்டும் பூமியை நோக்கி நீண்ட பயணத்தை ஆரம்பித்தது Hayabusa 2 விண்கலம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அண்ட வெளியில் உள்ள விண்கற்களின் மாதிரிகளை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்ட ஜப்பானின் Hayabusa 2 விண்கலமானது தற்போது மீண்டும் பூமியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இவ் விண்கலமாது விண்ணை நோக்கி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஏவப்பட்டிருந்தது.

அதன் பின்னர் கடந்த வருடம் ஜுன் 27 ஆம் திகதி முதல் 162173 Ryugu எனும் பூமிக்கு அண்மையில் உள்ள விண்கல்லினை ஆய்வு செய்து வந்தது.

இந்நிலையில் குறித்த விண்கல்லின் மாதிரியை சேகரித்துக்கொண்டு பூமிக்கான பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தினை குறித்த மிஷனில் ஈடுபட்டு குழு டுவிட்டரின் ஊடாக பகிர்ந்துகொண்டுள்ளது.

இதேவேளை இவ் விண்கலம் பூமியை வந்தடைந்ததும் சேகரித்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்