நாசாவிற்கு விழுந்த பேரிடி: முக்கிய செயற்கைக்கோளின் தொடர்பு துண்டிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நாசா விண்வெளி ஆய்வு மையம் Asteria எனும் செயற்கைக் கோளுடனான தொடர்பை எதிர்பாராத விதமாக இழந்துள்ளது.

சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டிருந்தது.

2017 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது முதல் சிறப்பாக செயற்பட்டுவந்த நிலையில் இவ்வாறு தொடர்பினை இழந்துள்ளமை நாசா விண்வெளி ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஆனது CubeSats எனும் வகையை சார்ந்ததுடன் சூட்கேஸினை விடவும் அளவில் சிறியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களில் பிரகாசங்களை அளவிடுவதிலும் நாசாவிற்கு உதவியாக இருந்த குறித்த செயற்கைக்கோளுடனான தொடரபினை மீண்டும் ஏற்படுத்துவதற்கு நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்