வயதான பெண்களை தாக்கி பலாத்காரம்: ஆசிரியர் கொலையில் கைதான சைக்கோவின் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்திய மாநிலம் கேரளாவில் முன்னாள் ஆசிரியர் கொலையில் சிக்கிய நபர் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் பத்தனம்திட்ட பகுதியில் முன்னாள் ஆசிரியர் ஒருவர் தனியாக குடியிருந்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த 2010 ஆம் ஆண்டு இரவு 9 மணியளவில் அந்த பெண் ஆசிரியரின் குடியிருப்புக்குள் நுழைந்த 36 வயதான சபீர் என்பவர்,

திடீரென்று ஆசிரியரின் தலையில் தாக்கியுள்ளார். சுயநினைவை இழந்த ஆசிரியரை இழுத்துச் சென்று குடியிருப்புக்கு வெளியே உள்ள மரத்திற்கு கீழே வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்துள்ள சபீர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் குறித்த ஆசிரியரின் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பின்னரே அழுகிய நிலையில் ஆசிரியரின் உடலை பொலிசார் மீட்டனர்.

இந்த விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் கொள்ளை சம்பவம் தொடர்பாக சிக்கிய சபீர், ஆசிரியர் கொலை தொடர்பாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆசிரியரின் சொத்துக்களை சொந்தமாக்கும் முடிவோடு அவரை கொலை செய்திருக்கலாம் என அவரது உறவினர் ஒருவரை பொலிசார் ஏற்கெனவே கைது செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே சபீர் தமது ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார். மட்டுமின்றி ஆசிரியர் உள்ளிட்ட 7 வயதான பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாகவும் சபீர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், குறித்த நபருக்கு ஆயுள் தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது நீதிமன்றம்.

மட்டுமின்றி கொள்ளை, குடியிருப்புக்குள் அத்துமீறல் உள்ளிட்ட குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் சிறையும் 18,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது பத்தனம்திட்ட செஷன்ஸ் நீதிமன்றம்.

மேலும் குற்றவாளி சபீருக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும், தேவையென்றால் சிகிச்சை அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers