போர் பதற்றம்.. இந்தியா-பாகிஸ்தான் வான்பகுதியில் விமான சேவை பாதிப்பு

Report Print Santhan in தெற்காசியா

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே போர் பதற்றம் நிலவியுள்ளதால், பாகிஸ்தான் தன்னுடைய பிராந்தியம் முழுவதும் விமானசேவையை நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்ததால், இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலால் பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இதன் காரணமாக இரு நாட்டின் எல்லைகளுக்கிடையே பதற்றம் நிலவி வருவதால், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விமானச் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு வடக்குப் பகுதியில் விமானப்படை விமானங்கள் தவிர பிற விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச விமானச் சேவையில் பாதிப்பு நேரிட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் இவ்வழியாக செல்வதை தவிர்த்துள்ளன.

சில விமானங்கள் அப்பகுதியில் இருந்து திரும்பி புறப்பட்ட இடத்திற்கே சென்றுள்ளது. பிற விமானங்கள் பிற வான் மார்க்கத்தை பயன்படுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய அரசு 8 விமானநிலையங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers