ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானத்தில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் உள்ள பிக்கானர் எல்லைப்பகுதியில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் யாரும் உயிரிழக்கவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவின்றன.
விமானத்தில் உள்ளிருந்த விமானிகள் பாராசூட் உதவியுடன் தப்பித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பக்க கோளாறின் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிகிறது.
ஆனாலும் இந்த விமான விபத்து நிகழ்ந்த பிக்கானர் பகுதி பாகிஸ்தானின் எல்லைப்பகுதியையொட்டி உள்ளது.
இதன் காரணமாக இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.