சொகுசு வாழ்க்கை.... கணவர் இறந்த 3வது நாளில் திருமணம் செய்ய கேட்ட காதலன்: வெளியான பகீர் தகவல்கள்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

கேரள மாநிலத்தின் தொடுபுழா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அம்மாநில மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஜீ என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் இறந்துபோன பின்னர், இவரது மனைவி தனது இரண்டு ஆண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று அவரது காதலன் அருண் ஆனந்துடன் சென்று வசித்து வந்துள்ளார்.

தனது காதலிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அருண் செய்துகொடுத்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அப்பெண்ணும் அருண்குமாருடன் சேர்ந்து வசிக்க தொடங்கியுள்ளார்.

ஆனால், நாளடைவில்தான் அருண்குமாரின் சுயரூபம் தெரியவந்துள்ளது. போதை மருந்துக்கு அடிமையான அருண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அப்பெண்ணிடம் தொடர்ந்து கூறிவந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, அப்பெண்ணின் 7 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்த குற்றத்திற்காக அவனை தூக்கி தரையில் ஓங்கி அடித்துள்ளார்.இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் கேரள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சிறுவனை மருத்துவமனைக்கு சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சந்தித்துள்ளார்.

சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளும் சிறுவனுக்கு பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.

தாயின் வாக்குமூலம்

எனது கணவர் இறந்தபின்னர் மாமனார் வீட்டு தரப்பில் இருந்து இரண்டு குழந்தைகளுக்கும் 6.5 லட்சம் பண உதவி செய்தார்கள். எனது தோழி ஒருத்தி எனக்கு வெளிநாட்டில் வேலை ஏற்பாடு செய்துகொடுத்தாள்.

இதற்கு அருணும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதற்குள்ளாக எனது படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் காணாமல்போய்விட்டது. மேலும், துப்பாக்கி முனையில் எனது தாயை மிரட்டி நாங்கள் குடியிருந்த வீட்டின் ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார் அருண்.

ஆரம்பத்தில் வங்கியில் வேலை பார்த்து வந்த அவர், அதன் பின்னர் அந்த வேலையை விட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இதற்கு முன்னர் நபர் ஒருவரை பீர் பாட்லில் தாக்கிய குற்றத்திற்காக 35 நாட்கள் சென்ட்ரல் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாமனார் வாக்குமூலம்

எனது மகன் மெக்கானிக் கடை ஒன்றை நடத்திவந்தான். அவன் உயிரிழந்த மூன்று நாட்கள் கூட ஆகாத நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி எனது மருமகளிடம் அருண் வற்புறுத்தினார்.

எனது மருமகளுக்கும், அருணுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. எங்களது வீட்டிற்கு அருகில் வசித்த வந்த அருணுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே பழகுவதை நிறுத்திவிட்டோம்.ஆனால், எனது மகன் இறந்து மூன்று நாட்கள் கழித்து அருண் எங்கள் வீட்டிற்கு வந்த எனது மருமகளுடன் பேசுவதை பார்த்தேன்.

மேலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் பிஜீவின் தங்கை மகனுக்கு லோன் பணம் ஏற்பாடு செய்துகொடுத்ததன் மூலம் அவனுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காத காரணத்தால் சிறு பிரச்சனை ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்