9 வயது சிறுமிக்கு துஸ்பிரயோகம்... தட்டிக்கேட்ட மனைவியை கொலை செய்த இளைஞர்: கொடூர சம்பவம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்திய மாநிலம் கேரளாவில் 9 வயது சிறுமியை சீரழித்த விவகாரத்தை தட்டிக்கேட்ட மனைவியை கொலை செய்த அசாம் மாநில இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பெரும்பாவூர் பகுதியில் வேலை நிமித்தம் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் 29 வயதான அப்துல் ஹக்கீம் என்ற அசாம் மாநில இளைஞர்.

இவர் அதே பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வந்த அசாம் மாநிலத்து 9 வயது சிறுமியை ஏமாற்றி ரப்பர் காட்டுக்குள் வைத்து பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார்.

அந்த இளைஞரிடம் இருந்து தப்ப முயன்ற சிறுமியின் கை கால்களை கயிற்றால் கட்டிவிட்டு, கொடூரமாக வன்மத்தை தீர்த்துள்ளார்.

இச்சம்பவத்தை வெளியே தெரிவித்தால் பெற்றோரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

ஆனால் குடியிருப்புக்கு தப்பி வந்த சிறுமி நடந்தவற்றை ஹக்கீமின் மனைவியிடம் ஒப்புவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த ஹக்கீம் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். பின்னர் தொடர்புடைய சிறுமியை தமது படுக்கை அறையில் அடைத்து வைத்து தொடர் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

மட்டுமின்றி 23 வயதான தமது மனைவியையும் பிறந்து 2 மாதம் மட்டுமேயான சொந்த பிள்ளையையும், ஏமாற்றி கூட்டி சென்று கிராமத்திற்கு வெளியே காட்டுப்பகுதியில் வைத்து கழுத்தை துண்டித்து கொலை செய்து அங்கேயே புதைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பில் எந்த பாதிப்பும் இன்றி அப்துல் ஹக்கீம் தொடர்ந்து கேரளாவிலேயே வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு குறித்த அசாம் சிறுமி பாடசாலையில் சேர்ந்த பின்னர், தமக்கு ஏற்பட்ட துயரத்தை பாடசாலை நிர்வாகிகளிடம் ஒப்புவித்துள்ளார்.

உடனடியாக பாடசாலை நிர்வாகம், பொலிசாரை தகவல் அறிவித்து, ஹக்கீமை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையிலேயே மனைவி மற்றும் 2 மாத குழந்தையை கொலை செய்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மனைவி மற்றும் குழந்தையை ஊருக்கு அனுப்பி வைத்ததாகவே அப்பகுதி மக்களிடம் ஹக்கீம் கூறி வந்துள்ளதும் அம்பலமானது.

இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்