திருமணமான 4 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்! கணவனுக்கு எழுந்த சந்தேகம்.. அதிரவைத்த வாக்குமூலம்

Report Print Raju Raju in தெற்காசியா

தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சப்னாமோல் (19). இவருக்கும் கேரளாவை சேர்ந்த முஜீப்ரகுமான் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.

கணவன்- மனைவி இருவரும் பாலக்காட்டின் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சப்னாமோல் கர்ப்பமடைந்தார். அவருக்கு திருமணமான 4 மாதத்திலேயே, பெண்குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கணவர் திருமணம் முடிந்து 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறக்கும் என மனைவி மீது சந்தேகப்பட்டார்.

இதனால் சப்னாமோல் மனமுடைந்து காணப்பட்டார்.

இதனிடையே, சப்னாமோல் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தையை தூக்கிக் கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

சம்பவத்தன்று, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பேச்சு மூச்சின்றி இருக்கிறது எனவும் சப்னாமோல் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் பதறிய சப்னாமோலின் பெற்றோர் குழந்தையை மருத்துவரிடம் காட்டிய நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

ஆனால் குழந்தையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொலிசார் விசாரித்தனர். அப்போது குழந்தையின் தாய் சப்னாமோல் மீது சந்தேகம் ஏற்பட அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சப்னாமோல் அளித்த வாக்குமூலத்தில், திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே குழந்தை பிறந்ததால் கணவருக்கு, என்மீது சந்தேகம் வந்தது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சனை வந்தது.

இதனால் வெறுத்து போய் போர்வையால் குழந்தையின் முகத்தில் அழுத்தி கொலை செய்தேன் என்று கூறினார்.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்