என் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் அதற்கு கட்டாயப்படுத்தினார்.. 17 வயது மகளின் கண்ணீர் புகார்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் தாயே தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாக 17 வயது மகள் கண்ணீருடன் புகார் கொடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் ஆஷா ராணி. கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

ஆஷாவின் மகள் காவல் துறை ஆணையரிடம் தாய் குறித்து பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், என் தாயின் தவறான உறவால் கடந்த 3 வருடங்களுக்கு முன் தந்தை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னரும் என் தாய் பல ஆண்களுடன் தொடர்ந்து பழகிவந்தார்.

ராம் லூபையா என்ற நபருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது. என்னையும் பல்வேறு ஆண்களுடன் பழக வற்புறுத்தினார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ராமிடம் ரூபாய் 3 லட்சம் பெற்றுக்கொண்டு என்னை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

ராம் என்னைப் பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தியதால் நான் அவரிடம் இருந்து தப்பித்து என் தாய் வீட்டுக்கு வந்தேன்.

ஆனால் என்னை அடித்து உதைத்து மீண்டும் அங்கேயே அவருடன் அழைத்து சென்று விட்டார்.

தாய் மற்றும் ராம் ஆகிய இருவரும் என்னைத் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தினர் என தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள். சிறுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமின் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, தன் தந்தையின் நண்பர் ஒருவரை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவரிடம் கூறியதை தொடர்ந்தே அவர் மூலம் எங்களிடம் புகார் கொடுத்தார் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...