கழிப்பறை வாசலில் பூஜை செய்து பிரார்த்தனை செய்த மக்கள்.. காரணம் என்ன தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் காவி நிறத்தில் உள்ள கழிப்பறை கட்டிடத்தை கோவில் கட்டிடம் என நினைத்து பலரும் பூஜைகள் செய்த நிலையில் தற்போது கட்டிடனத்தின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.

உத்தபிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஓராண்டுக்கு மேலாக காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட கட்டிடம் மூடப்பட்ட நிலையில் இருந்தது.

இந்த கட்டிடம் பார்ப்பதற்கு கோவில் கட்டிடம் போலவே இருந்ததால் பலரும் அதன் வாசலில் பிரார்த்தனை செய்வது, பூஜை செய்வது என இருந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அதிகாரி ஒருவர் அந்த கட்டிடம் கோவில் கட்டிடம் கிடையாது, கழிப்பறை கட்டிடம் என கூறியுள்ளார்.

மேலும் அதை கட்டியவர்கள் காவி நிறத்திலான பெயிண்ட் அடித்ததால் அது பார்ப்பதற்கு கோவில் போல இருந்தது தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் இதனால் அதிகம் குழம்பியதால் தற்போது இந்த கட்டிடத்துக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

என்ன தான் நிறம் மாறினாலும் அதிகாரிகள் கட்டிடத்தை திறக்காமல் காலம் தாழ்த்துகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்