பார்வையில்லாத ஆணுக்கும், பெண்ணுக்கும் முளைத்த அழகான காதல்... கோலாகலமாக நடந்த திருமணம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பார்வையில்லாத ஆணுக்கும், பெண்ணுக்கும் நடந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ். இவருக்கு பிறவியில் இருந்தே பார்வை கிடையாது.

ஆனாலும் தனது இசை திறமையை வளர்த்து கொண்ட சுராஜ் தன்னை போலவே பார்வையில்லாத சிறார்களுக்கு இசை கற்று கொடுக்கும் பணி செய்து வந்தார்.

அதே போல குஞ்சா என்ற இளம்பெண்ணுக்கும் சிறுவயதிலிருந்தே பார்வை கிடையாது.

ஆனால் படிப்பில் கில்லாடியாக திகழ்ந்த குஞ்சா, கடினமான சூழலிலும் பி.எட் பட்டப்படிப்பு படித்தார்.

அவர் கல்வி பயின்ற அதே பல்கலைக்கழகத்தில் சுராஜும் பயிற்சிக்காக வந்த போது இருவரும் சந்தித்து கொண்டனர்.

பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி சுராஜ் - குஞ்சா திருமணம் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் உறவினர்கள் மட்டுமின்றி, அரசியல் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்