முஷாரப் சடலத்தை மூன்று நாட்கள் தொங்கவிட வேண்டும்!: அந்த நீதிபதி மனநிலை சரியில்லாதவர்...

Report Print Abisha in தெற்காசியா

முஷாராப் சடலத்தை மூன்று நாட்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொங்கவிட வேண்டும் என்று தீர்பளித்தவர் மனநிலை சரியில்லாதவர் என்று நீதிதுறைக்கு பாகிஸ்தான் அரசு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், தேசதுரோக வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை 76 வயதான முஷாரப்பிற்கு மரண தண்டனை விதித்தது.

பெஞ்சாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகார் அகமது சேத் எழுதிய 167 பக்க விரிவான தீர்ப்பு வெளியிடப்பட்டது

அதில் தப்பியோடிய குற்றவாளியைக் கைது செய்வதற்கும், சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்கத்துறைக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

மேலும், தூக்கு தண்டனை நிறைவேற்றும் முன் முஷாரப் இறந்து கிடந்தால் அவரது சடலத்தை நாடாளுமன்ற வளாகத்திற்குள் இழுத்துவந்து மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விடவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளியானவுடன் அது குறித்து தமது சட்டக் குழுவினருடன் பிரதமர் இம்ரான்கான் ஆலோசனை நடத்தினார். அதை அடுத்து, இறந்தபின்னரும் தூக்கிலேற்ற தீர்ப்பளித்துள்ள நீதிபதி மனநிலை சரியில்லாதவர் என்றும், அவரை மாற்றுமாறும் நீதித்துறை கவுன்சிலுக்கு பாகிஸ்தான் அரசு பரிந்துரைத்துள்ளது.

எனவே இந்த தீர்ப்பில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...