கடல் நடுவில் தண்ணீரில் மிதக்கும் அழகிய நகரம்: நீங்க போய் வாழ ரெடியா?

Report Print Raju Raju in சிறப்பு

மனிதர்கள் புது புது விடயங்களை அனுதினமும் கண்டுபிடித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில், உலகிலேயே முதல் முறையாக தண்ணீரில் மிதக்கும் நகரம் பசிபிக் பெருங்கடலில் அமைக்கப்படவுள்ளது.

Seasteading Institute என்னும் நிறுவனம் பிரஞ்சு பொலினேஷியத் அரசுடன் சேர்ந்து இந்த விடயத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து Seasteading Instituteன் நிர்வாக இயக்குனர் Randolph Hencken கூறுகையில், கடலில் மிதக்கும் நகரம் உருவாக்குவதில் உள்ள பிரச்சனை குறித்து அறிவோம். வானிலை மாறும் பட்சத்தில் பல தீவுகளில் கடல் தண்ணீர் அளவு அதிகரிக்கும்.

அதை என்ன புதுமையான வழிகள் கொண்டு சமாளிக்க முடியும் என ஆலோசித்து வருகிறோம் என Randolph கூறியுள்ளார்.

இந்த கனவு திட்டத்தை செயல்ப்படுத்துவதற்கு முன்னர் இதன் பங்குதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் பொருளாதாரம் நன்மை அடையும் எனவும் உருவாகவிருக்கும் மிதக்கும் நகரம் சுற்று சூழல் நட்புடன் இருக்கும் என நிரூபிக்க வேண்டும்.

சோதனை கட்டத்தில் மட்டுமே இருக்கும் இத்திட்டம் சூரிய மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் பல தடைகளை தாண்டி தான் நிஜமாக உருவாகும் என தெரியவருகிறது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments