யூ-டியூப் ராணியாக வலம் வரும் 106 வயது பாட்டி! விதவிதமான உணவுகளை சமைக்கும் அசாத்திய திறமை

Report Print Raju Raju in சிறப்பு

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 106 வயதான மூதாட்டி விதவிதமான உணவுகளை சமைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மஸ்தானம்மா (106). இந்த வயதிலும் யார் உதவியும் இல்லாமல் இவர் தனது வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.

சமையல் செய்வதில் வல்லவரான மஸ்தானம்மா தினமும் விதவிதமான உணவுகளை செய்து அசத்துகிறார்.

பாரம்பரிய உணவுகள், மீன் வறுவல் முதல் சிக்கன் பிரியாணி வரை மஸ்தானம்மாவின் கைவண்ணம் கமகமக்கிறது

மஸ்தானம்மாவின் சமையல் திறமையை பார்த்த அவர் பேரன் லட்சுமணன், அவர் சமையல் செய்வதை வீடியோவாக எடுத்து யூ-டியூப் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அது யூ-டியூப்பில் வைரலாக பரவியுள்ளது. முதலில் இது குறித்து மஸ்தானம்மாவுக்கு புரியவில்லை.

பின்னர் யூ-டியூப்பில் தனது சமையல் வீடியோவை லட்சகணக்கான பேர் பார்க்கிறார்கள் என புரிந்து கொண்ட பாட்டி தன்னுடைய சமையல் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வீடியோவில் தன்னுடைய சமையல் ஆர்வம் பற்றியும், தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் மீதான பாசம் பற்றியும் மஸ்தானம்மா விவரித்து வருகிறார்.

இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் மஸ்தானம்மாவின் சமையல் வீடியோ பதிவுகளை பின்தொடருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments