தேனில் பிணத்தை ஊறவைத்து சாப்பிடும் வினோதம்: எங்கு தெரியுமா?

Report Print Printha in சிறப்பு

சீனாவில் மனித மாமிசத்தை சாப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது, அதுவும் சற்று வினோதமாக காணப்படுகிறது.

அதாவது 16-ஆம் நூற்றாண்டில் மனித உடலை தேனில் பதப்படுத்தி அதை Mellified Flesh என்னும் மருத்துவ பொருளாக பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இதை அறிவியலுக்காக ஆரம்பத்தில் ஒரு அரேபிய மருத்துவ முறையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர்.

இந்த முறையில் இறந்த மனித உடலை மருந்தாக மாற்ற முடியும் என்று கருதியுள்ளனர். மெல்லிஃபிகேஷன் எனும் முறையில் ஒரு மனித உடலை தேனில் பதப்படுத்தி மனித கேண்டி பார் போல செய்து விடுகிறார்கள்.

அதுவும் ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போதே இம்முறையை செய்கிறார்கள். இதற்காகவே சிலர் தங்கள் உயிரை தியாகம் செய்து அல்லது உடலை தானம் செய்யும் வழக்கமும் கொண்டுள்ளனர்.

இந்த மெல்லிஃபிகேஷனுக்கு உடலை தானம் செய்யும் நபர்கள் அதற்கு முன் தேன் டயட்டை பின்பற்றுவார்களாம்.

அதாவது அவர்கள் தேனை தவிர வேறு எந்த உணவையும் உட்கொள்ளாமல், அவ்வப்போது தேனில் குளிப்பார்கள்.

அதனால் அந்த நபரின் உடலில் தேன் தவிர வேறு எந்த உணவும் இருக்காது. இதையே தேன் டயட் என்று கூறுகிறார்கள்.

அதன் பின் இந்த தேன் டயட்டினை மேற்கொண்டு வரும் நபர் சில நாட்களில் மரணம் அடைந்து விடுவார்கள்.

அவர் இறந்த பின் அந்த உடலை ஒரு கல்லறையில் வைத்து அதனுள் தேன் முழுக்க ஊற்றி வைத்து விடுவார்கள்.

நூற்றாண்டு காலம் அந்த கல்லறை தேனில் ஊறி இருக்கும். தேன் எந்த பொருளையும் கெட்டுப் போக விடாது. இதனால் ஆண்டி-பாக்டீரியா தாக்கம் கொண்டு உடல் அப்படியே இருக்குமாம்.

சில நூற்றாண்டுகள் ஆனதும் அந்த உடல் ஒரு சர்க்கரை உருண்டையை போன்று மாறியிருக்குமாம்.

இப்படி நூற்றாண்டு காலம் முடிந்த பிறகு எடுக்கப்படும் உடலை தான் மெல்லிஃபிகேஷன் மேன் என்கிறார்கள்.

இந்த உடலை காயங்கள் மற்றும் உடைந்த எலும்புகளுக்கு மருந்தாக பயன்படுத்துவதோடு, உடல் உள்ளுறுப்பு கோளாறுகளுக்கு மருந்தாக சாப்பிடுகிறார்கள்.

அரேபியா மற்றும் சீனாவில் மட்டுமே மெல்லிஃபிகேஷன் மேன் எனும் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆனால் அகழ்வாராய்ச்சியில் எந்த ஒரு உடலும் இப்படி ஆதாரமாக கிடைக்கவில்லை.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...