மந்திரத்தமிழ்: கே. பாலச்சந்தரின் ‘சஹானா’ குறுந்திரைத் தொடர் நாயகி மீண்டும் திரையில்

Report Print Santhan in சிறப்பு

தமிழைப் போற்றும் ஒரு பாட்டு வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பாவலர் தவ சஜிதரன் எழுதிய தமிழ்த்தாய் அந்தாதியின் இரண்டு பாடல்கள் இசையமைக்கப்பட்டு யூட்யூப் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சதீஷ் ராம்தாஸ் இசையமைத்த இந்தப் படைப்பை உலகப்புகழ் பெற்ற அன்பு அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீட் கடந்த சனிக்கிழமை தனது முக நூல் பக்கத்தின் வழியாக வெளியிட்டு வைத்தார்.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய ‘சஹானா’ குறுந்திரைத் தொடரின் நாயகி காவ்யா சத்யதாஸ் தமிழ்த்தாய் அந்தாதிக் காணொளிப் பாடலில் தோன்றி அபிநயம் தந்திருக்கிறார்.

இசையும் தமிழும் நாட்டிய அபநயங்களும் காட்சி அமைப்பும் மயிர்க்கூச்செறியச் செய்யும் விதமாக உள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

‘நமது மண்ணின் பெருமைக்குரிய கவிஞர்’ என்று பாவலர் தவ சஜிதரனைக் குறிப்பிட்டிருந்த அப்துல் ஹமீட் அவர்கள் சதீஷ் ராம்தாசின் இசை தமிழோடு கைக்கோக்கும் விதம் கண்டு நெஞ்சம் பெருமையில் நிமிர்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். விருது வென்ற கலைஞர் திலோஜன் படத்தொகுப்பையும் வடிவமைப்பையும் செய்திருக்கிறார்.

தமிழ்த்தாய் அந்தாதியின் ஏனைய பாடல்கள் crowd funding முறையில் மக்கள் பங்களிப்போடு இசைக் காணொளிகளாக உருவாக்கப்பட உள்ளதாக ‘மொழியகம்’ அறிவித்துள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்