ஏவல் பில்லி சூனியம் போன்ற செயல்கள் பற்றிய சில உண்மை ரகசியங்கள்

Report Print Jayapradha in ஆன்மீகம்

பொதுவாக எந்தவொரு விஷயத்தை நாம் எடுத்துக் கொண்டாலும், அதில் நேர்மறை மற்றும் எதிர்மறை கண்டிப்பாக இருக்கும். அதே போல் தான் பில்லி சூனியம் விஷயத்திலும் உள்ளது.

சூனியம் எப்படி வைக்கிறார்கள்?

பில்லி சூனியம், ஏவல், செய்வினை போன்ற செயல் முறைகளை செய்யும் போது, தீயசக்திகளை பயன்படுத்தி பேய், பிசாசு போன்ற கெட்ட ஆவிகள் நிறைந்த குட்டிச் சத்தான்களுக்கு பலவிதமான பூஜைகள் செய்து தனக்கு வேண்டப்படாதவர்களின் உணவில் அல்லது அவர்கள் சாப்பிடும் திண்பண்டங்களில் செய்வினைப் பொருட்களை வைத்து அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து விடுவார்கள்.

சூனியம் வைப்பது எதற்கு?

சூனியம் என்பது மந்திரத்தை பயன்படுத்தி, தனக்கு பிடிக்காதவர்கள் அதிகமாக பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக மறைமுகமாக அவர்களை கொஞ்ச கொஞ்சமாக அழிப்பதற்கு செய்யப்படும் முறைகள்.

சூனியம் வைப்பதை எப்படி தெரிந்துக் கொள்வது?
  • ஏவல், பில்லி, சூனியம் வைப்பதை தெரிந்து கொள்ள, மருதாணி செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து அதனுடன் சாம்பிராணி கலந்து வீடு முழுவதும் மூன்று நாட்கள் தொடர்ந்து புகை போட்டு வர வேண்டும்.
  • இவ்வாறு புகை போடும் போது, உங்களுக்கோ அல்லது உங்களின் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் பில்லி சூனியத்தினால் பாதிப்பு இருப்பது உறுதியாகும்.
  • அதேபோல் நாம் சாப்பிடும் தின்பண்டங்கள் மற்றும் உணவில் செய்வினைகள் வைத்திருந்தால், அதை உறுதி செய்வதற்கு, முருங்கை இலையை சாறு எடுத்து உங்களின் உள்ளங்கையில் வைக்க வேண்டும்.
  • அந்த முருங்கைச் சாறு உறைந்து உங்கள் கையில் கெட்டியாக மாறினால், உங்கள் உடலில் செய்வினை மருந்து இருப்பது உறுதியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers