வீட்டில் செல்வம் நிலைக்க வேண்டுமா? இதோ இந்த அற்புத பரிகார முறைகள் செய்தாலே போதும்

Report Print Kavitha in ஆன்மீகம்

ஆன்மீகப்படி சில வழிகள் மூலம் வீட்டில் செல்வத்தை நிலைக்க வைக்க முடியும். அந்தவகையில் தற்போது தற்போது அந்த வழிகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
  • வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி கல் இவைகளில் உட்காரக்கூடாது. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
  • சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும். வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.
  • எழவு என்றும் கூறக்கூடாது. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக்கூடாது.
  • அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.
  • விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
  • லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்