கோவிலுக்குள் தப்பி தவறி கூட இதையெல்லாம் செய்யாதீங்க!

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

கோவிலுக்குள் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

 • கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கும், எதிரில் உள்ள நந்திக்கும் இடையில் விழுந்து வணங்குவதோ, குறுக்கே செல்வதோ கூடாது.
 • பிள்ளையாரை வணங்கும்போது தோப்புகரணம் போட்டு, நெற்றி பொட்டுகளில் லேசாகக் குட்டிக் கொள்ள வேண்டும்.
 • கோபுர தரிசன செய்யும்போது ஆண்கள் தலைக்குமேல் இரு கைகளை குவித்தும் பெண்கள் மார்புக்கு நேரே கைகளை குவித்தும் வணங்கவேண்டும்.
 • அம்மன் கோவிலில் பலி பீடத்தில் கொஞ்சம் உப்பு, மிளகைக் கொட்டி பிராத்தனை செய்ய வேண்டும். பலி பீடத்தை ஐந்து முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
 • சிவன் கோயிலாக இருந்தால் முதலில் சிவனையும் பிறகு அம்பாளையும் வணங்க வேண்டும்.
 • கோவிலில் பிரகாரங்களை வலம் வரும்போது வேகமாக நடக்கக்கூடாது.
 • சாமிக்கு அர்ச்சனை செய்து, ஆரத்தி காட்டியதும் பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ளவேண்டும்.
 • விபூதி, குங்குமம் போன்ற பிரசாதங்களை கோயில்களின் மற்ற இடங்களில் பூசக்கூடாது.
 • பெருமாள் கோவில்களில் நவக்கிரக வழிபாடு இல்லை. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கினாலே நவக்கிரங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.
 • கோவிலை அசுத்தம் செய்யக் கூடாது. எச்சில் துப்பக்கூடாது, தூங்கக் கூடாது, மொபைலில் பேசவும் கூடாது.
 • சிவன் கோயிலாக இருந்தால் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து சிவகனங்களை அங்கேயே விட்டு செல்ல வேண்டும்.
 • குளிக்காமல் கோவிலுக்கு போகக்கூடாது.
 • மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.
 • யாருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
 • வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு தர கூடாது.
 • மண் விளக்கு ஏற்றும் முன் கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது.
 • கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .
 • கோவிலுக்கு போய்விட்டு வந்தால் நேராக நம் வீட்டிற்கு செல்ல வேண்டும், வேறு எங்கும் போக கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...