ராகு கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை கட்டாயம் செய்திடுங்க... நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்

Report Print Kavitha in ஆன்மீகம்

ஜோதிட சாஸ்திரம் ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். இந்த ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் “சர்ப்ப தோஷம்” என அழைக்கப்படுகின்றது.

உங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த தோஷம் இருந்தால் உங்கள் வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டமும், போராட்டமும் நிறைந்திருக்கும் என்று சிலர் கூறுவார்கள்.

திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பல பிரச்சினைகள் ராகு கேது தோஷத்தால் வருகின்றன.

அந்தவகையில் ராகு கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

  • தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

  • துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

  • நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

  • ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்