ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை: படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை மக்கள்

Report Print Deepthi Deepthi in இலங்கை
789Shares
789Shares
ibctamil.com

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கலர்ஸ் என்ற தொலைக்காட்சியில், எங்கள் வீட்டுள் மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் சுமார் 16 இளம்பெண்கள் கலந்துகொண்டு ஆர்யாவின் மனதை கவர வேண்டும்.

அதில், தனது மனதுக்கு பிடித்த பெண்ணை ஆர்யா திருமணம் செய்துகொள்வார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என ஆர்யா மற்றும் நிகழ்ச்சி குழுவினர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதன் படப்பிடிப்புகள் யாழ்ப்பாணத்தில் உள்ள பழம்பெரும் தமிழ் நூலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பால், நூலகத்தின் அமைதியை கெடுத்துவிட்டதாகவும், நூலகத்திற்கு வெளியே படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, உள்ளே சென்று நடத்துகிறார்கள்.

எனவே, இந்த படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, வேறு இடத்தில் நடத்தலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்