ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் தொடர்பில் இலங்கை முக்கிய முடிவு

Report Print Arbin Arbin in இலங்கை

ஜான்சன் & ஜான்சன் நிறுவன பொருட்களால் புற்றுநோய் அபாயம் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து இலங்கை அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இலங்கை முழுவதும் ஜான்சன் & ஜான்சன் நிறுவன பொருட்கள் தற்போது கையிருப்பு வைத்துள்ளதால், அவை மட்டும் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நிறுவனமானது அதன் பேபி பவுடரில் புற்றுநோய் தாக்கும் அம்சங்கள் இல்லை என நிரூபித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு தங்களது பேபி பவுடர் தொடர்பில் பத்தாண்டுகளுக்கு முன்னரே தெரியும் என சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 1972 முதல் 1975 வரையான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தோல்வியடைந்ததாக தெரியவந்துள்ளது.

ஆனால் குறித்த சர்வதேச ஊடகத்தின் தகவலானது பொய்யானது எனவும் ஒருதலைப்பட்சமானது எனவும் ஜான்சன் & ஜான்சன் மறுப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் குறித்த தகவல் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் புற்றுநோய் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே சுகாதார அமைச்சக அதிகாரியான கமல் ஜெயசிங்க வெளியிட்ட கருத்தில், குறித்த நிறுவன பொருட்களை மேலும் இறக்குமதி செய்ய உரிய சோதனைக்கு பின்னர் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers