இலங்கையில் குண்டுவெடிப்பு: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

Report Print Raju Raju in இலங்கை

கொழும்பு உள்ளிட்ட 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 105 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், வீட்டின் உள்ளே இருக்கும் போது டிப்பர் வாகனத்தில் டயர் வெடித்தது போன்ற சத்தம் கேட்டது.

இதையடுத்து வெளியில் வந்து பார்த்த போது புகையாக காணப்பட்டது, இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற நாங்கள் உயிரோடு இருந்தவர்களை காப்பாற்றினோம். அதில் 4 சிறுவர்களும் அடக்கம்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்து கிடந்தவர்களின் சடலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றை தூக்கவில்லை, இன்னும் குண்டுகள் இருக்கிறதா என பொலிசார் தேடி வருகிறார்கள்.

100-க்கு மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கருதுகிறேன், ஆங்காங்கே சடலங்கள் துண்டுதுண்டாக காணப்பட்டது என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்