எனது மகளே என்னை அடையாளம் காணவில்லை: இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிர்தப்பிய தாயாரின் பகீர் நினைவுகள்

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையை உலுக்கிய வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாயார் ஒருவர் தமக்கு நேர்ந்த பகீர் அனுபவத்தை முதன் முறையாக பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் முக்கிய 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹொட்டல்களில் தற்கொலைப்பட தீவிரவாதிகளால் கொடூர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இதுவரை 359 பேர் கொல்லப்பட்டதாகவும் 500-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் புனித அந்தோனியார் தேவாலயத்தின் அருகாமையில் வாகனம் ஒன்று தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிர்மலா என்ற தமிழ் தாயார் தமது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மிகுந்த அச்சத்திலும் குழப்பத்திலும் ஆட்கொள்ளப்பட்ட நிர்மலா, தமது கணவர் பணிசெய்யும் பிரித்தானியாவுக்கே சென்றுவிடலாமா என எண்ணுவதாக தெரிவித்துள்ளார்.

தேவாலயத்தின் அருகாமையில் அமைந்துள்ளது நிர்மலாவின் குடியிருப்பு. திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று வெடித்துச் சிதறவும்,

நிர்மலா அவரது குடியிருப்புக்குள் பாய்ந்துள்ளார். மேலும், என்ன செய்வதென்று அறியாமல் உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.

மட்டுமின்றி, அந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் சுமார் 15 நிமிடங்கள் எந்த சிந்தனையும் ஓடவில்லை எனக் கூறும் நிர்மலா,

தமது மகளுக்கு என்னவாயிற்று என்பதை கூட அந்த நொடியில் மறந்துள்ளார்.

இதனிடையே தமது மகளை தேடிக் கண்டுபிடித்த நிர்மலா, அவரால் தம்மை அடையாளம் காண முடியாமல் போனது எனவும் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

கடவுள் தாம் தம்மை காப்பாற்றியதாக நிர்மலாவின் மகள் பலமுறை உருவிட்டப்படியே இருந்துள்ளார்.

வெடிகுண்டு தாக்குதல் நடந்த அந்த பகுதி முழுமையும் ரத்தமும் சதையுமாக பரவிக்கிடந்ததாக கூறும் நிர்மலா, தமது வாழ்க்கையில் மறக்க முடியாத கணங்களில் அதுவும் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்