இலங்கையில் பிரதான பதவிகளில் புதிய தலைவர்கள் நியமனம்...

Report Print Abisha in இலங்கை

இலங்கை காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா(Pujith Jayasundara) தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் விடுப்பு எடுத்து சென்றுள்ளதால், புதிய தலைவரை அந்நாட்டு அதிபர் நியமித்துள்ளார்.

இலங்கையில், கடந்த வாரம் ஈஸ்டர் தினத்தின் போது பல்வேறு பகுதிகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து அந்நாட்டின் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா பதவி விலகி விட்டதாக அதிபர் மைத்திரபால சிறிசேனா கடந்த வெள்ளியன்று அறிவித்திருந்தார்.

ஆனால் ஜெயசுந்தரா பதவி விலகுவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த கடிதமும் அளிக்கவில்லை. மேலும், அவர் தற்போது விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் புதிய காவல் துறை தலைவராக சந்தன விக்ரமரத்னேவை (Wickramaratne) சிறிசேனா நியமித்துள்ளார்.

மேலும், சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரியவை புதிய பிரதம நீதியரசராக சிறிசேன இன்று (திங்கள்கிழமை) நியமித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக முன்னாள் போலிஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்