இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு பின் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? மக்கள்-ஊடகங்கள் ஆதரவு! பாடம் கற்குமா இந்தியா

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் நடந்த தொடர்பு குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் அந்த நாடு எடுத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியா பாடம் கற்றுக் கொண்டுள்ளதா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

இலங்கையில் கடந்த 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர தாக்குதலை தடுப்பதில் இலங்கை அரசும், புலனாய்வுத் துறை அமைப்புகளும் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன. இந்தத் தாக்குதலை முன்கூட்டியே உளவறிந்து தடுத்திருக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால், குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பிறகு இலங்கை அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை.

தாக்குதலுக்குப் பிறகு இலங்கை அதை கையாண்ட விதத்தில் இரண்டு முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

முதலாவது, தாக்குதலுக்குப் பிறகு இலங்கை மக்களும், பாதுகாப்புப் படையினரும் நடந்து கொண்ட விதம். மற்றொன்று இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள்.

இவை இரண்டும் மிகமிக முக்கிய மானவை. அவற்றின் மூலம் இந்தியா என்னபாடம் கற்றுக் கொண்டது என்பதுதான் இப்போதைய கேள்வி.

கிழக்கு இலங்கை பகுதியில் தீவிரவாதிகள் தங்கியிருந்த ஒரு வீட்டை, கடந்த 27-ம் தேதி இலங்கை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர்.

உள்ளே இருந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பின்னர் தீவிரவாதிகள் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு காயங்களுடன் ஒரு பெண் குழந்தையையும் ஒரு பெண்ணையும் ராணுவ வீரர்கள் மீட்டு அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தன் நாட்டை எப்படி பாதுகாப்பது என்று தெரியும் என்று உறுதியாக தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். ‘‘இந்தத் தாக்குதல் துரதிருஷ்டவசமானது. எதிர்பாராமல் நடந்துவிட்டது. எனினும், இலங்கையைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை அரசுக்கு உள்ளது. தீவிரவாதத்தை முற்றிலும் நசுக்கும் வலிமை நமக்குள்ளது. அதற்கான சூழ்நிலையை உருவாக்குவேன்’’ என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் இறங்கினர். வாகனங்களை மறித்து சோதனை நடத்தினர். தாக்குதல் நடந்த ஒரு வாரத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் அதிரடி சோதனையில் இறங்கினர். அத்துடன் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இரவு நேரங்களில் நாடு முழுவதும் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டது. வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன.

தேவாயலங்கள் மூடப்பட்டன. வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிக்குச் செல்ல வேண்டாம் என்று முஸ்லிம்களை இலங்கை அரசு கேட்டுக் கொண்டது.

தேசம் மற்றும் தங்களது பாதுகாப்பு கருதி, இலங்கை முஸ்லிம் சமுதாயத்தினரும் இதற்கு ஒத்துழைத்தனர். முகத்தை மறைக்கும் புர்கா ஆடைகளுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

சுதந்திரம், மனித உரிமை என்ற பெயரில் எதிர்ப்புகள் எழும் என்பதைப் பற்றி இலங்கைஅரசு கவலைப்படவில்லை. தீவிரவாதத்தை ஒடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றை தயக்கமின்றி எடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

அதைவிட முக்கியம், இலங்கை அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அந்நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர். யாரும் எதிர்ப்பு காட்டவில்லை.

மத உரிமைகள் பறிக்கப்படுவதாக யாரும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் சரி, பொதுமக்களும் சரி யாரும் அரசைக் கண்டித்து எதுவும் சொல்லவில்லை.

மாறாக எல்லா நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இலங்கை அரசின் நடவடிக்கைகள் விவாதத்துக்குரியவையாக இருக்கலாம். ஆனால், அந்நாட்டு அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள்தான் இந்தியாவுக்கு முக்கியமான பாடமாக இருக்கும்.

ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கை தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்பு, இந்தியாவில் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த குண்டு வெடிப்பு ஆகியவற்றுக்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முரண்பட்டதாக இருக்கின்றன.

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவனின் குடும்பத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

ஆனால், இந்தியாவில் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் குடும்பத் தினரிடம் ஊடகங்கள் பேட்டி எடுத்தன.

அப்போது, தீவிரவாத தாக்குதலை அவர்கள் நியாயப்படுத்தி பேட்டி கொடுத்ததாக செய்திகள் வந்தன. குற்றவாளிகளுக்காக வாதாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

இலங்கை தலைநகர் கொழும்பில் சில பொது இடங்களில் மக்கள் செல்வதற்கு பாதுகாப்புப் படையினர் தடை விதித்தனர்.

ஆனால், இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக நகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு இலங்கை அரசு தடை அறிவித்தது. நாட்டின் பாதுகாப்பு நலனுக்காக இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு பல முஸ்லிம் அமைப்பு களின் தலைவர்கள் ஆதரவளித்தனர்.

“தனிமனித சுதந்திரத்துக்கு முக் கியத்துவம் அளிக்கும் இந்தியாவில் இதுபோன்ற தடை கொண்டு வருவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அப்படி தடை விதித்தால், சிறுபான்மையினத்தவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று எதிர்கட்சியினர் முத்திரை குத்தி பரபரப்பாக்கி விடுவார்கள். மதச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும் இதை திசை திருப்பி குற்றச்சாட்டுகள் எழும்” என்கிறார்கள் விமர்சகர்கள்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வுக்குள் ஊடுருவிய 10 தீவிரவாதிகள், கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி (26/11)மும்பையில் தாக்குதல் நடத்தினார்கள்.

ஓட்டலில் பதுங்கியிருந்த தீவிரவாதி களுடன் நடந்த சண்டையை இந்திய ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்ப அனு மதிக்கப்பட்டன. நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூடு, பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. புல்வா மாவிலும் தற்கொலைப் படை தீவிர வாதியின் புகைப்படத்தை சமூக வலை தளங்களில் ஜெய்ஷ் இ முகமது தீவிர வாத அமைப்பு வெளியிட்டு பரப்பியது.

பதற்றம் மிக்க இத்தருணத்தில், பொய்ச் செய்திகள் பரப்பப்படு வதையோ, சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான பிரச்சாரங் கள் நடப்பதையோ இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. உடனடியாக சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது.

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரி ழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் கூட்டங்கள் நடப்பதுகூட தீவிரவாதிகளுக்கு சாதகமாகிவிடும் என்று கருதுகிறது இலங்கை அரசு.

இலங்கை பத்திரிகைகளில்கூட அரசை பலவீனப்படுத்தக்கூடிய தலைப்புகளை செய்திகளில் அதிகம் காண முடிய வில்லை! பாதுகாப்பு முற்றிலுமாக உறுதி செய்யப்பட்ட பிறகு, அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவோம் என்பதாக ஊடகங்கள் முடிவெடுத்திருப் பதையே இது காட்டுகிறது.

நாட்டின் பாதுகாப்புதான் இப் போதைய முதல் தேவை என்ற கோணத் தில் இலங்கை அரசும், எதிர்கட்சி களும், பொதுமக்களும், ஊடகங்களும் ஒருசேர உணர்ந்திருப்பதையே மேற்கண்ட காட்சிகள் காட்டுகின்றன.யாரும் எதிர்ப்பு காட்டவில்லை. மத உரிமைகள் பறிக்கப்படுவதாக யாரும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை.

- Thehindu

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...