இலங்கையில் புத்தமதத்தினரின் போராட்ட எதிரொலி: இரண்டு கவர்னர்கள் ராஜினாமா...

Report Print Abisha in இலங்கை

இலங்கையில் இல்லாமிய கவர்னர்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் புத்தமதத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில், இரண்டு இஸ்லாம் கவர்னர்கள் பதவியை ராஜினாம செய்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த பிப்ரவரி மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததாக சிலர் மீது அங்குள்ள புத்த மதத்தலைவர்கள் குற்றம்சாட்டாட்டு வைத்தனர்.

அவ்வகையில். மேற்கு மாகாண கவர்னர் ஆஸாத் சாலே மற்றும் கிழக்கு மாகாண கவர்னர் ஹிஸ்புல்லா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதை இவர்கள் இருவருமே மறுத்து வந்தனர். ஆனால், அவர்களின் மறுப்பு அறிக்கைகளை புத்த தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான அதுரலியே ரதானா கண்டி நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த இரு முஸ்லிம் கவர்னர்களையும் அதிபர் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை எனது உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து, பிரபல புத்த மதத்தலைவர் கலகோடாத்தே ஞானசாரா, கொழும்பு கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவர் கர்டினல் மால்கோம் ரஞ்சித் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண கவர்னர்களாக பதவி வகிக்கும் இவர்கள் இருவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் கண்டி நகரில் இன்று புத்த மதத்தினர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்விளைவாக, மேற்கு மாகாண கவர்னர் ஆஸாத் சாலே மற்றூம் கிழக்கு மாகாண கவர்னர் ஹிஸ்புல்லா ஆகியோர் இன்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers