இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்... ராஜபக்சே ஆதரவாளர் திடுக் தகவல்

Report Print Basu in இலங்கை

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 253 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறது. இதுதொடர்பாக யாரும் விவாதிக்க முன்வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய போது, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் எச்சரித்ததையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அரசியல் மற்றும் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அம்பாந்தோட்டை உள்ளதால் சீனாவை தொடர்ந்து இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இங்கு கால்பதிக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்