இலங்கையில் வெளிநாட்டுப்பெண் கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதால் சர்ச்சை!

Report Print Balamanuvelan in இலங்கை
195Shares

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு இலங்கை ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை கொண்டவரான Yvonne Jonsson என்ற இளம்பெண்ணின் தாய் ஒரு இலங்கையர்.

2005ஆம் ஆண்டு Yvonne தான் தங்கியிருந்த Royal Park என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பில் Shramantha Jayamaha என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில், Yvonneஇன் மண்டையோடு 64 துண்டுகளாக நொறுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. முதலில் Jayamahaவுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

aftonbladet.se

பின்னர் அவர் மேல் முறையீடு செய்தபோது, அவரது மேல் முறையீட்டு வழக்கு நிராகரிக்கப்பட்டதோடு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது.

இந்நிலையில், தனது ஆட்சிக்காலத்தின் கடைசி வாரத்தில் இருக்கும் இலங்கை ஜனாதிபதி Maithripala Sirisena, Jayamahaவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ள சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Yvonneஇன் சகோதரியான Caroline Jonsson-Bradley, இலங்கை ஜனாதிபதியின் முடிவுக்கான உண்மையான காரணத்தை வெளியிடுமாறு கோரி அவருக்கு வெளிப்படையாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

asianmirror

அதில் அவர், இரண்டு மகள்களின் தந்தையாகிய ஒருவர் இப்படிப்பட்ட ஒரு ராட்சதனை விடுவிக்க முடிவெடுத்தது எப்படி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எழுதியுள்ளார்.

சென்ற மாதம் Jayamahaவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க இருப்பதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்தபோது, குறிப்பிட்ட நபர் சிறையில் நன்னடத்தையுடன் செயல்பட்டதாகவும், 19 வயதில் பொறுமையற்று செய்த ஒரு செயலுக்காக சிறையிலடைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Jayamahaவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் செய்தி இலங்கையர்கள் உட்பட மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் பதிவிட்டுள்ள ட்வீட்டுகளிலிருந்து அறியமுடிகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்