தேர்தல் தோல்வி எதிரொலி.. மங்கள சமரவீரா உள்ளிட்ட இலங்கை அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா

Report Print Basu in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரமதாச தோல்வியடைந்த நிலையில், ஜக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இலங்கை அமைச்சர்கள் தொடர்ந்து பதிவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றிப்பெற்றுள்ள நிலையில், மக்களின் தீர்ப்பை ஏற்று ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சஜித் பிரமதாச அறிவித்தார்.

அதனையடுத்து, ஐக்கிய தேசிய கட்சி பதவி மற்றும் விளையாட்டுத்துறை உட்பட அனைத்து அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தாக ஹரின் பெர்னாண்டோ அறிவித்தார்.

தற்போது அதனைத்தொடர்ந்து, அமைச்சர் மங்கள சமரவீரா நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஜித் பி. பெரேரா, இலங்கை மக்களின் ஆணையை மதித்து உடனடியாக ராஜினாமா செய்வதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்