இதற்கு பிறகு தான் காணாமல் போன தமிழர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்: இலங்கை ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

Report Print Basu in இலங்கை

நாட்டின் உள்நாட்டுப் போரின் போது இறந்ததாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கானோருக்கான இறப்புச் சான்றிதழ்கள் முறையான விசாரணையின் பின்னர் மட்டுமே வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்கள் இறந்துவிட்டனர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சாவின் கருத்துக்களைத் தொடர்ந்து வெளிவந்துள்ள இந்த அறிக்கை, உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தேவையான விசாரணைகளுக்குப் பிறகு, இறப்புச் சான்றிதழ் வழங்கவும், குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான உதவிகளும் எடுக்கப்படும் என்று ராஜபக்ச அலுவலகம் தெரிவித்துள்ளது.

திங்களன்று ராஜபக்ச தெரிவித்த தனது முந்தைய கருத்துக்களில், மே 2009ல் தமிழ் பிரிவினைவாதப் போர் முடிவடைந்ததிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை என்றும் அது கூறியுள்ளது.

ஆனால் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக 23,500 க்கும் மேற்பட்ட புகார்கள் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 5,000 பாதுகாப்பு வீரர்களாக இருந்தவர்கள்.

காணாமல் போனவர்கள் குறித்த கேள்வி அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்களுக்கு ஒரு அதிமுக்கிய பிரச்சினையாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்