இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: முழுமையான தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்?

Report Print Fathima Fathima in இலங்கை

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

22 தேர்தல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 77 வாக்கு எண்ணும் நிலையங்களில் இன்று காலை 7 மணி மற்றும் 8 மணி முதல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.

இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலைக்கு முன்னர் முழுமையான தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்