இந்த உணவை சாப்பிடுவதால் கொரோனா வராது: ஊடகவியலாளர்கள் முன் இலங்கை முன்னாள் அமைச்சர் சாப்பிட்ட பொருள்

Report Print Balamanuvelan in இலங்கை
252Shares

இலங்கையின் முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் ஊடகவியலாளர்கள் முன் பச்சை மீன் ஒன்றை சாப்பிட்டுக் காட்டிய சம்பவம் கொரோனாவால் உலகம் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது என்னும் நிதர்சனத்தைக் கண் முன் காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த கொடிய கொரோனா உலகமெங்கும் பரவி கொலை வெறி கொண்டு மனித உயிர்களை பலிகொண்டது ஒருபுறம்.

மறுபுறம், அது ஏற்படுத்திய தாக்கம்... முன்பும் உலகில் கொள்ளை நோய்கள் பரவியுள்ளன, ஆனால், உலகமெங்கும் பொருளாதாரத்தை பாதித்து, மக்கள் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு அவை இருந்தன என்று சொல்ல முடியாது.

ஆனால், இந்த கொரோனாவின் தாக்கம், ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, உறவுகள், நட்பு, பாசம் என வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் பலவற்றில் அத்துமீறி நுழைந்துள்ளது.

இலங்கையில் மத்திய மீன் சந்தை வளாகத்தில் சென்ற மாதம் ஏற்பட்ட ஒரு கொரோனா பரவலைத் தொடர்ந்து பல இடங்களுக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. எனவே, அதன் தொடர்ச்சியாக நாட்டில் மீன் விற்பனை சரிந்துள்ளது.

இந்நிலையில், சென்ற ஆண்டுவரை மீன் வளத்துறை அமைச்சராக இருந்த Dilip Wedaarachchi (63), ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் முன் பேசிய Dilip Wedaarachchi, மக்கள் மீன் சாப்பிடவேண்டும் என கோரிக்கை ஒன்றை வைக்கிறேன்.

மீன் சாப்பிடுவதால் கொரோனா வராது, அதை காட்டுவதற்காக மீன் ஒன்றை நான் வாங்கி வந்துள்ளேன் என்று கூறிய Dilip Wedaarachchi, ஊடகவியலாளர்கள் முன்னாலேயே அந்த மீனை பச்சையாகவே கடித்து சாப்பிட்டுக் காட்டினார்.

நம் நாட்டில் மீன் பிடிப்பவர்களால் அதை விற்கமுடியவில்லை. மக்கள் மீன் சாப்பிடாததால், மீன் பிடிப்பவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. அதனால் அவர்கள் கடனில் மூழ்கியிருக்கிறார்கள் என்றார் Dilip Wedaarachchi.

நாட்டில் மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்ற ஆதங்கத்தை அவரது பேச்சில் தெளிவாகவே பார்க்க முடிந்தது.

பிரித்தானிய உணவு தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சியும், உணவு மூலம் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே (very unlikely) என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்