சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகளவில் வீட்டு வாடகை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியீடு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகளவில் வீட்டு வாடகை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியீடு
656Shares
656Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிக மற்றும் குறைந்தளவில் வீட்டு வாடகை கட்டணத்தை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள முக்கிய 15 நகரங்களில் எந்த கட்டணத்தில் வாடகை வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து Comparis.ch என்ற இணையத்தளம் அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வில், 3 அல்லது 3.5 அறைகளை கொண்ட குடியிருப்புகளின் வாடகையை ஒப்பிட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை வெளியான ஆய்வு முடிவுகளில், சுவிட்சர்லாந்து நாட்டிலேயே சூரிச் நகரில் தான் அதிக வாடகை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதாவது, சூரிச் நகரில் 3 அல்லது 3.5 அறைகள் கொண்ட ஒரு வீட்டில் ஒரு மாதத்திற்கு தங்க வேண்டும் என்றால் வாடகையாக 2.324 பிராங்க் கட்டணம் செலுத்த வேண்டும். சூரிச் நகரத்திற்கு அடுத்ததாக ஜெனிவா நகரம் திகழ்கிறது.

இந்த நகரில் வாடகைக்கு குடியிருக்க மாதத்திற்கு 1995 பிராங்க் வாடகையாக செலுத்த வேண்டும். மூன்றாவது இடத்தில் லவ்சென் நகரில் 1,850 பிராங்க் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கு எதிர்மறையாக, Neuchatel மாகாணத்தில் உள்ள La Chaux-de-Fonds என்ற நகரில் தான் சுவிட்சர்லாந்து நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் வாடகை வசூலிக்கப்படுகிறது.

அதாவது, இந்த நகரில் 3 அல்லது 3.5 அறைகள் கொண்ட வீடுகளில் வசிக்க மாதம் 1,120 பிராங்க் மட்டுமே செலுத்த வேண்டும்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் St Gallen, Schaffhausen மற்றும் Biel/Bienne ஆகிய நகரங்களில் வசிக்க மாதம் சராசரியாக 1,300 பிராங்க் செலுத்த வேண்டும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments