பெண் பயணிகள் முன்பு ஆபாசமாக நடந்துகொண்ட நபர்: கொந்தளித்த இணையவாசிகள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் ஓடும் ரயிலில் பெண் பயணிகள் முன்னிலையில் ஆபாசமாக நடந்துகொண்ட சம்பவம் இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வோட் மற்றும் வாலெய்ஸ் மாகாணங்களுக்கிடையே ஓடும் ரயிலில் குறித்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த நபர் இச்சம்பவத்தை வீடியோவாக பதிந்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ரயில் பயணத்தில் சக பயணிகளாக பெண்கள் இருந்தும் குறித்த நபர் அவர்களை கணடு கொள்ளாமல் அவர்கள முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார்.

குறித்த வீடியோ பதிவை பார்த்த இணையவாசிகள் கடுமையான விமர்சனத்தை பதிவிட்டுள்ளனர். இதனைடையே அந்த மர்ம நபர் மீது பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

அந்த நபர் குறித்த மேலதிக தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், ஓடும் ரயிலில் பெண் பயணிகள் முன்னிலையில் முகம் சுழிக்கும்படி ஆபாசமாக நடந்து கொண்டது கண்டிப்பாக தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய குற்றச்செயல் எனவும் வாலெய்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குறித்த நபரின் வீடியோ பதிவை நூற்றுக்கணக்கணக்கான மக்கள் பகிர்ந்துள்ளனர். அதில் ஒருவர் குறித்த நபரை பல முறை ரயிலில் பார்த்திருப்பதாகவும், பெண்களின் அருகாமையில் இருந்துகொண்டே அந்த நபர் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிசாரின் கோரிக்கைக்கு இணங்க குறித்த ஆபாச வீடியோவை அந்த பேஸ்புக் பக்கத்தில் இருந்து குறித்த அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments