தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் மோதி பலியான இளம்பெண்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள பேர்ன் மாகாணத்தில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை 5 மணியளவில் Kehrsatz என்ற பகுதிக்கு அருகில் பிஎல்எஸ் ரயில் வழித்தடத்தில் இளம்பெண் ஒருவர் நடந்துச் சென்றுள்ளார்.

அப்போது, Weissenbuhl நகரை நோக்கி ரயில் ஒன்று அசுர வேகத்தில் சென்றுக்கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில், தண்டவாளத்தின் மீது ஏறி நடந்த அப்பெண்ணை ரயில் ஓட்டுனர் கண்டு ரயிலை உடனடியாக நிறுத்த முயன்றுள்ளார்.

ஆனால், வேகமாக வந்த ரயிலை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பெண் மீது ரயில் பயங்கரமாக மோதி சென்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையில் நிகழ்ந்த விபத்தை தொடர்ந்து இரு வழித்தட ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments