சுவிஸ் முழுவதும் தீவிரமாக தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் பயங்கர ஆயுதத்தால் இருவரை தாக்கிவிட்டு தப்பிய நபர் ஒருவரை பொலிசார் 25 மணி நேர தேடலுக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

சுவிஸில் உள்ள காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் Franz Wrousis(50) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை சுவிஸ் நேரப்படி காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு சென்றபோது விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அலுவலகத்தில் பணிபுரிந்த இருவரையும் தான் கொண்டு வந்த ஆயுதத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

மரங்களை அறுக்கும் ரம்பத்தை அவர் ஆயுதமாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து நபரை கைது செய்ய நாடு முழுவதும் கைது வாரணட் பிறபிக்கப்பட்டது.

சுவிஸ் எல்லையில் உள்ள பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சுவிஸ் மற்றும் ஜேர்மன் நாடுகளை சேர்ந்த சுமார் 100 பொலிசார் தேடுதல் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

ஆனால், ஒரு நாள் முழுவதும் தேடியும் நபரை கைது செய்ய முடியாமல் பொலிசார் திணறியுள்ளனர்.

எனினும், முயற்சியை கைவிடாத பொலிசார் சூரிச்சில் உள்ள Thalwil என்ற பகுதியில் தேடியபோது அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

எதனால் காப்பீட்டு நிறுவனத்தில் தாக்குதல் நடத்தினார் என்ற தகவலை பொலிசார் வெளியிடவில்லை.

இக்கைது நடவடிக்கை தொடர்பாக விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்