சுவிஸ்சில் சிறப்பாக நடைபெற்ற முனைப்பின் கதம்பமாலை 2017

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
463Shares
463Shares
ibctamil.com

முனைப்பின் கதம்பமாலை 2017 நிகழ்வு சுவிட்ஸர்லாந்து லுசேன் மாநிலத்தில் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மா.குமாரசாமியின் வழிநடாத்தலின் கீழ் நிர்வாகப்பணிப்பாளர் தா.வேதநாயகம் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வின் போது ஆசியுரை ஆற்றிய இராம சசிதரக்குருக்கள் தெரிவிக்கையில், விருந்தோம்பலை மட்டக்களப்பு மக்களிடமிருந்தே கற்றுக்கொள்ளவேண்டும்.

நீங்கள் அனைவரும் ஒருதடவை மட்டக்களப்பு சென்று வாருங்கள் என ஆசான் தாசீசியஸ் அண்மையில் கூறியவிடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

வடமாகாணத்தைவிட கிழக்கு மாகாணம் பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட மாகாணம், நாம் அனைவரும் அங்குள்ள மக்களின் வறுமையினை போக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

இவ்விழாவினை மகிதநேயத்துக்கும் மனிதத்திற்குமான விழாவாகவே பார்க்கின்றேன் என்றார்.

கல்லாறு சதீஸ் தனது சிறப்புரையில் அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி" எனும் குறளுக்கேற்ப "கொடையே சிறந்த சேமிப்பு "எனும் உண்மையை

உணர்ந்த சபையானது, "ஈதல் இசைபடவாழ்தல்,அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" எனும் குறல் வழியே "கொடையே உண்மைப் புகழ்" எனும் பொருள் உணர்ந்து இணைந்திருந்தமை "அறம் செய விரும்பு"

உழைப்பில் 10வீதத்தினையும் உழைப்பை 10வீதமும் மற்றவர்களுக்காக செலவழிக்க வேண்டும் என்றார்.

நிர்வாகப்பணிப்பாளர் தா.வேதநாயகம் தனது தலைமையுரையில் எதனையும் நாம் இலவசமாக பெறக்கூடாது என்ற மனநிலையினை நாம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும்.

அத்துடன்மக்களின் வறுமைநிலையினை போக்க மக்களுக்கு உழைப்பைக்காட்டுவோம்,உழைக்க கற்றுக்கொடுப்போம் இதனையே முனைப்பு தற்போது செய்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் மந்தபோசாக்கு, கல்வியறிவின்மை, தற்கொலை, மதுப்பாவனை போன்ற பல்வேறு சவால்களை சந்தித்துள்ள மாவட்டமாகக்காணப்படுகின்றது.

அது மாத்திரமின்றி கல்விநிலையில் ஆரம்பக்கல்வியில் கிழக்கு மாகாணம் 9வது இடத்திலும், க.பொ.த.சாதாரணதரத்தில் 8வது இடத்திலும் உள்ளது.

இதற்கெல்லாம் காரணம் மக்களின் வறுமை நிலையே இதனைப்போக்க புலம்பெயர்ந்து வாழும் நாம் சிறிய பங்களிப்பாவது வழங்கவேண்டும்.

இன்று நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் நாளை நாங்கள் நம்மவர்களை காப்பாற்றுவோம் என்ற குரல் எமது மண்ணிலிருந்து நமது காதுகளுக்கு வருகின்றன என்றார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்