குழந்தைகளை அடிக்க பெற்றோருக்கு தடை: வருகிறது புதிய சட்டம்?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
553Shares
553Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் குழந்தைகளை அடிக்க பெற்றோருக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சுவிஸில் செயல்பட்டு வரும் ‘No Violence Against Children' என்ற அமைப்பு தான் இக்கோரிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளது.

சுவிஸில் குழந்தைகளை அடித்து வளர்க்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

ஆனால், ஒழுக்கமாக வளர்ப்பதற்காக அடிக்கிறோம் என எந்த காரணத்தை குறிப்பிட்டும் குழந்தைகளை அடிக்க கூடாது என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுக்குறித்து பெற்றோர்களிடம் ஆய்வு செய்தபோது, ‘சில காரணங்களுக்காக குழந்தைகளை அடித்து வளர்ப்பது சரி தான் என 20 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், குற்றங்கள் செய்யாதவாறு ஒழுக்கமாக வளர்ப்பதற்கு குழந்தைகளை அடிப்பது மட்டுமின்றி அதற்கு மேலும் மிரட்டி வளர்ப்பது சரி தான் என 12 சதவிகித பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிதாக் எழுந்துள்ள இக்கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், இதனை அரசாங்கத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பாடசாலையில் ஆசிரியர்கள் மட்டுமின்றி வீடுகளில் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை அடிக்க 53 நாடுகள் சட்டப்பூர்வமாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்